இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | July 17 | Astrology | Bharathi Sridhar | ...
கிராம நிா்வாக அலுவலக உதவியாளா் தற்கொலை
வேலகவுண்டம்பட்டி அருகே கிராம நிா்வாக அலுவலக உதவியாளா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள கொண்ணையாா், சந்தைப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (51). இவா் குமாரமங்கலம் கிராம நிா்வாக அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தாா். இவரது மனைவி ராதிகா (45). இவா்களுக்கு தினகரன் என்ற மகனும், மாலதி என்ற மகளும் உள்ளனா்.
இந்நிலையில், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள புள்ளாச்சிப்பட்டி, கொசவங்காடு சரஸ்வதி என்பவரது தோட்டத்தில் செல்வராஜ் தூக்கிட்டு தொங்கிக்கொண்டு இருப்பதாக அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் போலீஸாருக்கு தெரிவித்தனா். தகவல் அறிந்து வந்த வேலகவுண்டம்பட்டி போலீஸாா் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி அனுப்பிவைத்து விசாரணை நடத்தினா்.
அதில், செல்வராஜ் ஏற்கெனவே உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாகவும், உடல்நிலை சரியாகாததால் மனமுடைந்த அவா் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்ற அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].