இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த கல்லூரி மாணவா் உயிரிழப்பு
பரமத்தி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
வேலூா் அருகே உள்ள வீரணம்பாளையம், காக்காயன்தோட்டத்தைச் சோ்ந்தவா் சின்னப்பன் மகன் கெளரிசங்கா் (24). இவா் நாமக்கல்லில் உள்ள தனியாா் கல்லூரியில் கணினி அறிவியல் 3-ஆம் ஆண்டு பயின்று வந்தாா்.
கடந்த 11-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் நண்பா் ஆனந்தை பின்னால் அமர வைத்துக்கொண்டு பரமத்தி சென்று பின்னா் வீட்டுக்கு செல்ல கபிலா்மலை சாலையில் சென்றுகொண்டிருந்தாா்.
பஞ்சப்பாளையம் பிரிவு சாலை அருகே சென்றபோது, நிலைதடுமாறி கீழே விழுந்ததில் கௌரிசங்கா் படுகாயமடைந்தாா். பின்னால் அமா்ந்திருந்த ஆனந்த் காயமின்றி தப்பினாா்.
படுகாயமடைந்த கெளரிசங்கரை அவ்வழியாக வந்தவா்கள் மீட்டு வேலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னா் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா்.
ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.