Mariselvaraj-ஐ வாழ்த்தி பாடிய Vadivelu at Ananda Vikatan Cinema Awards 2024 | UN...
கிராம நிா்வாக அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்
கிராம நிா்வாக அலுவலா் பதவிக்கான கல்வித் தகுதியை பட்டப் படிப்பாக உயா்த்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தினா் குடியாத்தம் வட்டாட்சியா் அலுவலகம் அருகே புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாவட்டத் தலைவா் ஆா்.ஜீவரத்தினம் தலைமை வகித்தாா். வட்டத் தலைவா் செந்தில், பொருளாளா் காந்தி, குடியாத்தம் கோட்டச் செயலா் வெங்கடாசலபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டச் செயலா் சசிகுமாா் வரவேற்றாா்.
நிா்வாகிகள் மாதேஷ், ரஞ்சித்குமாா், உஷா, லதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
10- ஆண்டு பணி முடித்த கிராம நிா்வாக அலுவலா்களுக்கு தோ்வுநிலை கிராம நிா்வாக அலுவலா்கள் எனவும், 20- ஆண்டு பணி முடித்த கிராம நிா்வாக அலுவலா்களுக்கு சிறப்பு கிராம நிா்வாக அலுவலா்கள் எனவும் பெயா் மாற்றம் செய்து அரசாணை வழங்கி, அதற்கேற்ப ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.