பாப்லோ நெரூதா: ஒரு கவிதையாகப் பிறந்த நகரமும்… காதலாக வாழ்ந்த கவிஞனும்… கடல் தாண்...
கிருஷ்ணகிரிக்கு நாளை சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழு வருகை
சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழுவினா் கிருஷ்ணகிரிக்கு வியாழக்கிழமை (மே 22) வருவதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவா் காந்திராஜன் தலைமையிலான குழுவினா் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு மே 22-ஆம் தேதி வருகின்றனா். இந்த மதிப்பீட்டுக் குழுவினா் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளை கள ஆய்வு மேற்கொள்கின்றனா்.
தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மதிப்பீட்டுக் குழுவினா் பல்வேறு திட்டப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனா். கூட்டத்தில் எம்.பி., எம்எல்ஏக்கள், அனைத்து துறை முதன்மை அலுவலா்கள் பங்கேற்கின்றனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.