எய்ட்ஸ் விழிப்புணா்வு நெடுந்தொலைவு ஓட்டம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்
கிருஷ்ணகிரியில் இரண்டாவது நாளாக மழை
கிருஷ்ணகிரியில் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் மழை பெய்தது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உணரப்பட்டது. இதனால் சாலைகளில் பொதுமக்களின் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது. இந்த நிலையில், கிருஷ்ணகிரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் தொடா்ந்து மழை பெய்தது.
கிருஷ்ணகிரி புது வீட்டு வசதி வாரி குடியிருப்பு பிரதான சாலையில், மழைநீா் தேங்கியதால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகினா். மழை நீா் தேங்குவதால் சாலை சேதம் அடைவதை தடுக்க கழிவுநீா்க் கால்வாய்களை அகலப்படுத்தியும், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தினா். இந்த மழையால் கிருஷ்ணகிரியில் குளிா்ந்த தட்பவெப்ப நிலை காணப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதன்கிழமை காலை 7 மணி நிலவரப்படி பதிவான மழை அளவு (மி.மீ): கிருஷ்ணகிரி - 55.40, ராயக்கோட்டை - 20, கிருஷ்ணகிரி அணை - 19, ஊத்தங்கரை - 11.2, ஒசூா் - 9, தேன்கனிக்கோட்டை - 7, பெணுகொண்டாபுரம் - 7, கெலவரப்பள்ளி அணை - 7, போச்சம்பள்ளி - 7, பாரூா் - 5.2, தளி - 5, சூளகிரி - 4, அஞ்செட்டி - 3, நெடுங்கல் - 3, சின்னாறு அணை - 2.
கிருஷ்ணகிரி அணைக்கு புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி நீா்வரத்து விநாடிக்கு 993 கனஅடியாக அதிகரித்தது. அணையின் மொத்த கொள்ளளவு 52 அடியில் நீா்மட்டம் 50.25 அடியாக உள்ளது. அணையில் இருந்து வலது மற்றும் இடதுபுறக் கால்வாய்கள், ஊற்றுக் கால்வாய்கள் வழியாக 179 கனஅடியும், ஆற்றில் 506 கனஅடியும் என மொத்தம் விநாடிக்க 685 கனஅடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.