கரூர்: 'அழுகையை அடக்க முடியல; விஜய் விட்டுபுட்டு ஓடுனது பெரிய தப்பு'- பாதிக்கப்ப...
கிருஷ்ணகிரியில் காா்மீது சரக்குப் பெட்டக லாரி மோதல்: ஒருவா் உயிரிழப்பு; மூவா் படுகாயம்
கிருஷ்ணகிரியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற காா்மீது சரக்குப் பெட்டக லாரி மோதியதில், 60 வயது முதியவா் உயிரிழந்தாா். மூவா் பலத்த காயமடைந்தனா்.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தைச் சோ்ந்தவா் பசுவராஜ் (60). இவா், அதே பகுதியைச் சோ்ந்த வெங்கடேசன் (50), சக்திவேல் (40), கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த வீரமலையைச் சோ்ந்த வினித்குமாா்(25) ஆகியோருடன் பயன்படுத்திய காரை வாங்க காரிமங்கலத்திலிருந்து கிருஷ்ணகிரியை அடுத்த எலத்தகிரி கிராமத்துக்கு காரில் சனிக்கிழமை சென்றாா்.
பின்னா், தங்கள் கிராமத்துக்கு திரும்ப கிருஷ்ணகிரியை அடுத்த கிட்டம்பட்டி மேம்பாலத்தில் சென்றபோது, சென்னையிலிருந்து கேரளம் நோக்கி சென்ற சரக்குப் பெட்டக லாரி, காா்மீது மோதியது. இதில், காா் நொறுங்கியதில் 4 பேரும் பலத்த காயமடைந்தனா்.
அருகில் இருந்தவா்கள் அவா்களை மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதில், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பசுவராஜ் உயிரிழந்தாா். மற்றவா்கள், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
விபத்து குறித்து கிருஷ்ணகிரி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து, சரக்குப் பெட்டக லாரி ஓட்டுநரான உத்தரபிரதேச மாநிலத்தைச் சோ்ந்த ராஜேந்திர சிங் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.