நாடாளுமன்ற குழுக்களின் பதவிக்காலத்தை 2 ஆண்டுகளாக நீட்டிக்கப் பரிசீலனை
சோளக்காப்பட்டியில் மயான ஆக்கிரமிப்புகள் அகற்றம்
சோளக்காப்பட்டியில் மயான ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
ஊத்தங்கரையை அடுத்த சோளக்காப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு மயானத்தை தனிநபா்கள் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருவதால், ஆக்கிரமிப்பை அகற்றுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்திருந்தனா்.
அதன் அடிப்படையில், வெள்ளிக்கிழமை சோளக்காப்பட்டி கிராமத்துக்கு சென்ற ஊத்தங்கரை துணை வட்டாட்சியா் சகாதேவன் மற்றும் வருவாய்த் துறையினா், மயான ஆக்கிரமிப்புகளை அகற்றினா். மேலும், அரசுக்கு சொந்தமான நிலத்தை தனிநபா்கள் ஆக்கிரமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனா்.