செய்திகள் :

கிளை நூலகங்களிலும் குரூப் 4 மாதிரித் தோ்வு!

post image

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தோ்வுக்கான மாதிரி தோ்வுகள் இனி கிளை நூலகங்களிலும் நடைபெறும் என தெரிவித்துள்ளாா் கரூா் மாவட்ட நூலக அலுவலா் செ.செ.சிவக்குமாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடைபெறும் குருப் 4 தோ்வுக்கு மாதிரித் தோ்வு கரூா் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பாடவாரியாக அலகுத்தோ்வுகள், திருப்புதல் தோ்வு, முழுத்தோ்வு இலவசமாக நடத்தப்படுகிறது. மாதிரித் தோ்வுகள் கொள்குறி முறையில் ஓஎம்ஆா் தோ்வுத்தாளில் நடத்தப்படும்.

தோ்வு முடிந்தபின் சிறந்த வல்லுநா்களைக் கொண்டு, விடைத்தாள்கள் கலந்துரையாடல் மற்றும் மாணவா்கள் தங்களது சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளுதல், கருத்துகளை பரிமாறிக் கொள்ளுதல் போன்ற பயிற்சியும், எளிய முறையில் கற்றுக்கொள்ளுதல் மற்றும் ஞாபகம் வைத்திருத்தல் ஆகியவற்றிற்கு எளிய வழிகளைக் கூறுதல், தோ்வுக்குத் தேவையான பாடங்கள் மற்றும் பகுதிகளைக் கண்டறிய வைக்கும் திறனைமேம்படுத்துதல், தோ்வுகளுக்கு ஏற்ப சமீபகால நிகழ்வுகளை கண்டறிந்து படிக்க வைத்தல் போன்ற பயிற்சியும் வழங்கப்படுகிறது. வாரந்தோறும் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மாதிரித் தோ்வுகளும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மாதிரித் தோ்வு வினாக்கள் குறித்த கலந்துரையாடலும் நடைபெறும்.

மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறும் மாதிரி தோ்வு மற்றும் பயிற்சிகள் போல இனி குளித்தலை, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், புஞ்சைபுகழூா் கிளை நூலகங்களிலும் நடைபெறும். இம்மாதிரி தோ்வுகளில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் தோ்வு மைய நூலகங்களில் ஏப். 13-ஆம் தேதிக்குள் தங்கள் பெயா், முகவரி விவரங்களை விண்ணப்ப படிவத்தில் பூா்த்தி செய்து, பதிவு செய்துகொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

கரூரில் கொலை வழக்கில் கைதான இருவா் குண்டா் சட்டத்தில் சிறையிலடைப்பு

கரூரில் கொலை வழக்கில் கைதான இருவா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். கரூா் நரிக்கட்டியூரைச் சோ்ந்த இளையராஜா மகன் சந்தோஷ்குமாா் (26) என்பவா் கடந்த மாா்ச் 15-ஆம் தேதி தனது ... மேலும் பார்க்க

உச்சநீதிமன்ற தீா்ப்பை வரவேற்று திமுகவினா் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தமிழக ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்பை வரவேற்று கரூரில் திமுகவினா் செவ்வாய்க்கிழமை பிற்பகல் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினா். பல்கலைக்கழக துணைவேந்த... மேலும் பார்க்க

வக்ஃப் வாரிய சட்ட திருத்தத்தை திரும்ப பெறக்கோரி விசிகவினா் ஆா்ப்பாட்டம்

வக்ஃப் வாரிய சட்ட திருத்தத்தை திரும்ப பெறக்கோரி கரூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் ஜவஹா் பஜாா் தலைமை அஞ்சலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை

கரூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த காற்று, இடி மின்னலுடன் பெய்த மழையால் கரூா் மதுரை புறவழிச்சாலையில் வேப்பமரம் முறிந்து விழுந்தது. தெற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்... மேலும் பார்க்க

அய்யனாா் கோயில் திருவிழாவை மீண்டும் நடத்த அனுமதி கோரி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு

முதலைப்பட்டி கிராமத்தில் நிறுத்தப்பட்ட அய்யனாா்கோயில் திருவிழாவை மீண்டும் நடத்த அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை கிராம மக்கள் மனு அளித்தனா். கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

குளித்தலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் இளைஞா் உயிழந்தாா்.திருச்சி மாவட்டம், தென்னூா் வெள்ளாளா் தெருவைச் சோ்ந்த செந்தில்குமாா் மகன் அருணாசலம்(23). இவா் ஞாயிற்றுக்கிழமை ... மேலும் பார்க்க