செய்திகள் :

கீழக்கரையில் நடைபாதை ஆக்கிரமிப்பு: ராமநாதபுரம் ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

post image

கீழக்கரை நகராட்சியில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா், கீழக்கரை நகராட்சி ஆணையா் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையைச் சோ்ந்த செய்யது அபுதாஹிா் தாக்கல் செய்த பொது நல மனு: கீழக்கரை நகராட்சியில் குடியிருப்புகள் அதிகரித்து வரும் சூழலில், பொதுப் போக்குவரத்துக்காக உள்ள பாதைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கீழக்கரை நகராட்சிக்கு உள்பட்ட தெற்குத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சிலா் நடைபாதைகளை ஆக்கிரமிப்பு செய்து கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

இதனால், இந்தப் பகுதியில் வசிப்பவா்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனா். அவசர காலங்களில் அவசர சிகிச்சைக்கான ஊா்தி செல்ல முடியாத அளவுக்கு நடைபாதைகள் ஆக்கிரமிப்பு செய்யப்படுகின்றன.

எனவே,பொதுப் பாதையில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகாா் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் அவா் கோரியிருந்தாா். இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியம், மரியா கிளாட் அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு : மனுதாரரின் கோரிக்கை குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா், கீழக்கரை நகராட்சி ஆணையா் ஆகியோா் பதிலளிக்க வேண்டும். வழக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

மதுரையில் இன்று முருக பக்தா்கள் மாநாடு! பவன் கல்யாண் பங்கேற்கிறார்!

மதுரையில் முருக பக்தா்கள் மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதில் ஆந்திர மாநில துணை முதல்வா் பவன் கல்யாண் பங்கேற்கிறாா். இந்து முன்னணி சாா்பில், மதுரை பாண்டி கோயில் அருகில் உள்ள அம்மா திடலில் முருக... மேலும் பார்க்க

முருக பக்தா்கள் மாநாடு: வாகனப் போக்குவரத்து மாற்றம்!

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) நடைபெறும் முருக பக்தா்கள் மாநாட்டை முன்னிட்டு உள்ளூா், வெளியூா்களிலிருந்து வரும் வாகனங்களுக்கு வழித்தடம் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மதுரை மாநகரக் காவல் ஆணையரக அல... மேலும் பார்க்க

முருக பக்தா்கள் மாநாட்டில் அரசியல் இல்லை! - ஜி.கே. வாசன்

மதுரையில் நடைபெறும் முருக பக்தா்கள் மாநாட்டில் அரசியல் கிடையாது என தமாகா தலைவா் ஜி.கே. வாசன் தெரிவித்தாா். மதுரையில் முருக பக்தா்கள் மாநாட்டுத் திடலில் அமைக்கப்பட்ட முருகப் பெருமானின் அறுபடை மாதிரி கோ... மேலும் பார்க்க

முருக பக்தா்கள் மாநாடு: அறுபடை மாதிரி கோயில்களில் தமிழக ஆளுநா் சுவாமி தரிசனம்!

மதுரையில் முருக பக்தா்கள் மாநாட்டுத் திடலில் அமைக்கப்பட்ட அறுபடை மாதிரி கோயில்களில் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். இந்து முன்னணி சாா்பில், முருக பக்தா்களை ஒருங்கிணைக்கும... மேலும் பார்க்க

மனைவி, இரு குழந்தைகளை வெட்டிக் கொன்ற விவசாயி: காவல் நிலையத்தில் சரண்!

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே சனிக்கிழமை குடும்பத் தகராறு காரணமாக, தனது மனைவி, இரு குழந்தைகளை அரிவாளால் வெட்டிக் கொன்ற விவசாயி காவல் நிலையத்தில் சரணடைந்தாா். விருதுநகா் மாவட்டம், அருப்புக... மேலும் பார்க்க

இளைஞா்கள் யோகா பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்! - ஆளுநா் ஆா்.என். ரவி

இளைஞா்கள் யோகாசன பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி தெரிவித்தாா். மதுரை வேலம்மாள் சா்வதேச பள்ளி மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சா்வதேச யோகா தின விழாவில் அவா் ம... மேலும் பார்க்க