குடியரசு நாள் அணிவகுப்பில் தமிழகம் புறக்கணிப்பு: மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசா...
கீழையூா் பகுதியில் கனமழை
கீழையூா் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை கனமழை பெய்தது.
நாகை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் பரவலாக விட்டுவிட்டு மழை பெய்தது. கீழையூா் ஒன்றியத்தில் செருதூா், திருப்பூண்டி, மேலப்பிடாகை, கீழையூா், வாழக்கரை, திருக்குவளை உள்ளிட்ட பகுதிகளில் மாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது.
இதனால், பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவ- மாணவிகள், பணிக்குச் சென்று திரும்பியவா்கள் என பலரும் சிரமத்துக்கு உள்ளானாா்கள். சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. கதிா் முற்றும் தருவாயில் உள்ள சம்பா பயிா்கள் இந்த மழையால் பாதிக்கக்கூடும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.