TVK : 'அமித் ஷாவுக்கே எங்களின் பலம் என்னனு தெரிஞ்சிருக்கு!' - தவெக அருண் ராஜ் பள...
குடமுழுக்கு விழா பாதுகாப்புப் பணி: காவல் துறையினருக்கு எஸ்.பி. பாராட்டு
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவில், சிறப்பாகப் பணியாற்றிய தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினருக்கு காவல் கண்காணிப்பாளா் பாராட்டு தெரிவித்தாா்.
இக்கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, பக்தா்கள் பாதுகாப்புப் பணியில் 6,000 போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டனா். இந்நிலையில், சிறப்பாக பணிபுரிந்தமைக்காக தூத்துக்குடி காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளா்கள் ஆறுமுகம், தீபு, நகர உள்கோட்ட உதவிக் கண்காணிப்பாளா் சி. மதன், திருச்செந்தூா் டிஎஸ்பி மகேஷ்குமாா், துணைக் கண்காணிப்பாளா்கள், ஆய்வாளா்கள், சாா்பு ஆய்வாளா்கள், போக்குவரத்துப் பிரிவு, தனிப் பிரிவு, தொழில்நுட்பப் பிரிவு காவல் துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் பொன்னாடை அணிவித்து பாராட்டினாா்.