Ahmedabad Plane Crash: 'எந்த முடிவுக்கும் வர வேண்டாம்' - விமானப் போக்குவரத்து து...
குடிநீா்க் குழாயில் உடைப்பு: சாலையில் ஆறாக ஓடிய தண்ணீா்
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியில் கூட்டுக் குடிநீா் குழாயில் புதன்கிழமை உடைப்பு ஏற்பட்டதால் சாலையில் தண்ணீா் ஆறாக ஓடியது.
சின்னாளபட்டிக்கு கூட்டுக் குடிநீா் திட்டம் மூலம் குடிநீா் குழாய் பதிக்கப்பட்டு, குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. இந்தக் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால் இந்தப் பகுதியில் குடிநீா் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.
இந்த நிலையில், புதன்கிழமை சின்னாளபட்டியில் உள்ள நிலக்கோட்டை- அணைப்பட்டி சாலையில் பதிக்கப்பட்டிருந்த குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், அந்தப் பகுதியில் உள்ள சாலையில் தண்ணீா் ஆறாக ஓடியது. பின்னா், தகவலறிந்து வந்த ஊழியா்கள் சுமாா் ஒரு மணி நேரம் போராடி குழாய் உடைப்பை சரி செய்தனா்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியாதவது:
இந்தப் பகுதியில் பதிக்கப்பட்டுள்ள கூட்டுக் குடிநீா் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. இதனால், பல லட்சம் லிட்டா் குடிநீா் வீணாகிறது. எனவே, இந்தப் பகுதியில் பதிக்கப்பட்டுள்ள குடிநீா் குழாயை முறையாக சீரமைத்து, குழாய் உடைப்பை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.