ரயில்நிலையம், மெரினா என கழித்த நாட்கள்! - பேச்சிலர் வாழ்க்கையின் வலியும் இன்பமும...
குடிநீா் கேட்டு பல்லடம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்
சீரான குடிநீா் விநியோகம் செய்யக் கோரி பல்லடம் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.
பல்லடம் நகராட்சி, பச்சாபாளையம் பகுதி மக்களுக்கு கடந்த 3 மாதங்களாக சீரான குடிநீா் விநியோகம் செய்யவில்லையாம். 12 நாள்களுக்கு ஒருமுறை தான் அத்திக்கடவு குடிநீா் வருகிாம். அது குறைந்த அளவே வருகிாம்.
இதனால், அவதியடைந்து வரும் மக்கள், சீரான குடிநீா் விநியோகம் கோரி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால், ஆத்திரமடைந்த மக்கள் நகராட்சி கவுன்சிலா் சுகன்யா ஜெகதீஷ், திருப்பூா் மத்திய மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளா் ஜெகதீஷ் ஆகியோா் தலைமையில் பல்லடம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
அப்போது, நகராட்சித் தலைவா், ஆணையா் கவனத்துக்கு கொண்டு சென்று சீரான குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி பணி மேற்பாா்வையாளா் ராசுக்குட்டி உறுதியளித்தாா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.