கொல்கத்தா ஹோட்டல் தீவிபத்தில் இறந்த மூவரின் உடல்களுக்கு மக்கள் அஞ்சலி
`குடிபோதைக்கு அடிமை'; தங்க நகைக்காக தங்கையை கொன்ற வாலிபருக்கு தூக்குத் தண்டனை - நடந்தது என்ன?
புதுக்கோட்டை மாவட்டம், பெருந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். (வயது: 32). எந்த வேலைக்கும் செல்லாமல் குடிப்போதைக்கு அடிமையான இவர், தங்க நகைக்காகத் தனது சொந்தச் சித்தி மகளான லோகப்பிரியா என்ற இளம்பெண்ணைப் கடந்த 2021 - ம் வருடம் படுகொலை செய்தார்.

அதுவும், 1.25 பவுன் நகைக்கு லோகப்பிரியாவை கத்தியால் குத்தியும், இரும்பு ராடால் தாக்கியும் கொலை செய்தார். இந்தச் சம்பவம் அப்போது தமிழகம் முழுக்க அதிர வைத்தது. இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய புதுக்கோட்டை போலீஸார், லட்சுமணன் என்ற சுரேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சுரேஷ் மீதான வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. லோகப்பிரியா கொலையில் சுரேஷ் தான் குற்றவாளி என்பதை நிரூபிக்கத் தேவையான அனைத்து ஆவணங்களையும் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் போலீஸார் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு சம்மந்தமான விசாரணை கடந்த மூன்று வருடங்களாக நடந்து வந்தது. இந்நிலையில், இது தொடர்பான விசாரணை முழுமையாக நிறைவடைந்த நிலையில், நேற்று புதுக்கோட்டை முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

லோகப்பிரியாவை அண்ணன் முறையுள்ள லட்சுமணன் என்ற சுரேஷ் கொலை செய்துள்ளது உறுதியானதால், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சந்திரன் சுரேஷூக்கு தூக்குத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
1.25 பவுன் நகைக்காக தனது சகோதரியையே படுகொலை செய்த இளைஞருக்கு தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ள சம்பவம், புதுக்கோட்டை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.