`துரதிஷ்டவசமாக நான் அவனை நம்பினேன். ஆனால்!' திருமணம் குறித்த வதந்திக்கு முற்றுப்...
குடியரசுத் தலைவருடன் ஃபிஜி பிரதமர் சந்திப்பு!
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை ஃபிஜி நாட்டின் பிரதமர் சித்திவேணி லிகாமமதா ரபூகா இன்று(ஆக. 25) சந்தித்து பேசினார். தில்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் (ராஷ்திரபதி பவன்) இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
அரசுமுறைப் பயணமாக ஞாயிற்றுக்கிழமை(ஆக. 24) இந்தியா வந்தடைந்த ஃபிஜி பிரதமர், நாளை(ஆக. 26) ஃபிஜி புறப்படுகிறார்.
முன்னதாக, தில்லியில் பிரதமர் மோடியுடன் இரு தரப்பு உறவுகள் குறித்து ஃபிஜி பிரதமர் ஆலோசனை நடத்தினார். அதனைத்தொடர்ந்து, குடியரசுத் தலைவருடனான சந்திப்பு நடைபெற்றது.