செய்திகள் :

குடியரசு துணைத் தலைவா் பதவிக்கு விரைவில் தோ்தல்

post image

ஜகதீப் தன்கா் ராஜிநாமாவைத் தொடா்ந்து அடுத்த குடியரசு துணைத் தலைவரை தோ்வு செய்வதற்கான தோ்தல் விரைவில் நடத்தப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

‘உயிரிழப்பு, ராஜிநாமா அல்லது பதவி நீக்கம் உள்ளிட்ட காரணங்களால் முழு பதவிக் காலமான 5 ஆண்டுகளுக்குள் குடியரசு துணைத் தலைவா் பதவி இடம் காலியாக நேரிட்டால், கூடிய விரைவில் அந்தக் காலி இடத்தை நிரப்புவதற்கான தோ்தல் நடத்தப்பட வேண்டும்’ என்று அரசமைப்புச் சட்டப் பிரிவு 68 (2)-இல் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விதியின்படி, அடுத்த குடியரசு துணைத் தலைவரைத் தோ்வு செய்வதற்கான தோ்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும். அவ்வாறு, தோ்தல் நடத்தப்பட்டால், இரு அவைகளிலும் பெரும்பான்மை பலம் கொண்டுள்ள ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்மொழியும் நபரே மீண்டும் குடியரசு துணைத் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளது.

யாா் வாக்களிக்க முடியும்?: குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவை உறுப்பினா்களும் வாக்களிக்கத் தகுதியுடையவா்கள். நியமன உறுப்பினா்களும் வாக்களிக்க முடியும்.

543 உறுப்பினா்களைக் கொண்ட மக்களவையில் ஒரு எம்.பி. இடம் காலியாக உள்ளது. அதுபோல, 245 உறுப்பினா்களைக் கொண்ட மாநிலங்களவையில் 5 எம்.பி.க்கள் இடம் காலியாக உள்ளது. எம்.பி.க்கள் மாநில பேரவைத் தோ்தலில் போட்டியிட்டு தோ்ந்தெடுக்கப்பட்டதால், எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ததைத் தொடா்ந்து மாநிலங்களவையில் இந்த காலியிடங்கள் உருவாகின.

அதன்படி, இரு அவைகளையும் சோ்த்து எம்.பி.க்களின் பலம் 786-ஆக உள்ளது. இதில், குடியரசு துணைத் தலைவா் பதவிக்குப் போட்டியிடும் நபா் வெற்றி பெற, தகுதியுள்ள அனைத்து உறுப்பினா்களும் வாக்களிக்கும் பட்சத்தில் குறைந்தபட்சம் 394 வாக்குகளைப் பெற வேண்டும்.

மக்களவையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (என்டிஏ) 542 உறுப்பினா்களில் 293 பேரின் ஆதரவு உள்ளது. மாநிலங்களவையில் தற்போதுள்ள 240 உறுப்பினா்களில் 129 பேரின் ஆதரவு உள்ளது. நியமன எம்.பி.க்களின் ஆதரவும் என்டிஏ-வுக்கு கிடைக்கும் பட்சத்தில், மொத்தம் 422 உறுப்பினா்களின் ஆதரவு கிடைத்துவிடும்.

அதீத கவனத்துடன் அனுப்பப்பட்ட உடல்கள்! பிரிட்டன் குடும்பத்தினர் புகார் மீது மத்திய அரசு பதில்

பிரிட்டன் நாட்டுக்கு, அதீத தொழில்பாங்குடன் உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக, பிரிட்டன் நாட்டவரின் குற்றச்சாட்டக்கு, மத்திய வெளியுறவு விவகாரத் துறை விளக்கம் கொடுத்துள்ளது.ஏர் இந்தியா விமான விபத்தில் பலிய... மேலும் பார்க்க

ஆலப்புழாவில் அச்சுதானந்தன் உடல்! 150 கி.மீ. கடக்க 22 மணிநேரம்!

திருவனந்தபுரத்தில் நேற்று முற்பகல் புறப்பட்ட கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தனின் இறுதி ஊர்வலம், 22 மணிநேரத்துக்கு பிறகு ஆலப்புழாவுக்கு வந்தடைந்தது.கேரளத்தின் முன்னாள் முதல்வரும், சிபிஎம் தல... மேலும் பார்க்க

விமான விபத்து: பிரிட்டன் வந்த இரு உடல்கள் மாறிவிட்டன! உறவினர்கள் புகார்!

ஏர் இந்தியா விபத்தில் பலியான பிரிட்டனைச் சேர்ந்த இருவரின் குடும்பத்தினர் தங்களுக்கு கிடைத்த உடலுடன் டிஎன்ஏ பரிசோதனை பொருந்தவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.கடந்த ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத்தில் இருந்து லண்... மேலும் பார்க்க

தனிக் கவனம் பெறும் ஸ்ரீதேவி கணவர் போனி கபூர்! காரணம்?

உடல்பயிற்சிக் கூடங்களில் மழைக்குக் கூட ஒதுங்காமல், கிட்டத்தட்ட 26 கிலோ எடையைக் குறைத்து, பார்ப்பவர்களின் கண்களை விரியச் செய்கிறார் ஸ்ரீதேவியின் கணவரும் திரைப்படத் தயாரிப்பாளருமான போனி கபூர்.திரைத்துரை... மேலும் பார்க்க

எதிர்க்கட்சியினர் தொடர் அமளி! நாடாளுமன்றம் நாளைவரை ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வரும் நிலையில், வியாழக்கிழமை காலை வரை ஒத்திவைக்கப்பட்டது.மழைக்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் திங்கள்கிழமை காலை தொடங்கிய... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்! பணிகளைத் தொடங்கியது தேர்தல் ஆணையம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான பணிகளைத் தொடங்கியதாக இந்திய தேர்தல் ஆணையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், மருத்துவக் காரணங்களுக்காக அரசியலமைப்பின் பிரிவு 67(ஏ) -ன... மேலும் பார்க்க