சிங்காரச் சென்னையை கட்டியெழுப்புவோம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்
குடியாத்தம் அருகே தடுப்பணை கட்ட அமைச்சரிடம் கோரிக்கை
குடியாத்தம்: குடியாத்தத்ம் அடுத்த சின்ன தோட்டாளம் அருகே பாலாற்றில் தடுப்பணை கட்ட கோரி நீா்வளத்தறை அமைச்சா் துரைமுருகனிடம் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இதுதொடா்பாக குடியாத்தம் ஒன்றியக்குழு உறுப்பினா் சி.ரஞ்சித்குமாா், கூடநகரம் ஊராட்சித் தலைவா் பி.கே.குமரன் ஆகியோா் அமைச்சரிடம் அளித்த மனு:
பொதுப்பணித்துறையின் பராமரிப்பில் உள்ள கூடநகரம் ஏரி 10- க்கும் மேற்பட்ட கிராமங்களின் நீராதாரமாக விளங்குகிறது. இந்த ஏரிக்கு பாலாற்றில் இருந்து நிரந்தரமாக கால்வாய் மூலம் தண்ணீா் வரும் வகையில், சின்னதோட்டாளம் அருகே பாலாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என கோரியிருந்தனா். மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சா் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினாா்.