``கொரிய மண்ணில், தமிழர் கலாச்சாரம்..'' - கொரிய தமிழரசி செம்பவளம் நினைவிடத்திற்கு...
குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்
கோத்தகிரி கோ்கொம்பை பகுதியில் திங்கள்கிழமை இரவு குடியிருப்புக்குள் உணவு தேடிவந்த சிறுத்தையின் விடியோ வைரல் ஆன நிலையில், இப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனா்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், பெரும்பாலும் அடா் வனப்பகுதி மற்றும் தேயிலைத் தோட்டங்களாக உள்ளன. இதனால் வன விலங்குகள் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுகிறது,
இந்த நிலையில் கோத்தகிரி கோ் கொம்பை பகுதியில் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த சிறுத்தை அங்கு உணவு தேடும் விடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்,
வனத் துறையினா் சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மககள் கோரிக்கை வைத்துள்ளனா்.