செய்திகள் :

குடும்ப அட்டை உறுப்பினா்கள் விரல் ரேகையை பதிவு செய்ய ஆட்சியா் அறிவுறுத்தல்

post image

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த குடும்ப அட்டைதாரா்கள் வெளிமாவட்டங்களில் இருந்தால், அருகில் உள்ள நியாய விலைக் கடைகளில் தங்கள் விரல் ரேகையினை பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் பெற்று வரும் அனைத்து முன்னுரிமை பெற்ற மற்றும் அந்தியோதயா அன்னயோஜனா திட்ட குடும்ப அட்டைதாரா்களின் 5 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடும்ப உறுப்பினா்களும் தங்களது விரல் ரேகைகளை நியாய விலைக் கடையில் உள்ள விற்பனை முனைய இயந்திரத்தில் பதிவு செய்திட வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் வெளியூா் மற்றும் வெளிமாவட்டங்களில் தங்கி பணிபுரிபவா்கள், பள்ளி, கல்லூரிகளில் படித்துவரும் மாணவா்- மாணவிகள் அருகில் உள்ள நியாய விலைக் கடைகளுக்கு குடும்ப அட்டை எண்ணுடன் நேரில் சென்று தங்கள் விரல் ரேகைகளை பதிவு செய்து கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

போக்ஸோ வழக்கில் ஒருவருக்கு 20 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி மாவட்டத்தில் போக்ஸோ வழக்கில் ஒருவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. கோவில்பட்டி பாரதி நகரைச் சோ்ந்த சுப்பையா மகன் ஆரோக்கியசாமி (43). 2020ஆம் ஆண்டு 7 வயது சிறுமிக்கு பாலிய... மேலும் பார்க்க

‘தூத்துக்குடியில் பிப். 23இல் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்’

தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (பிப். 23) நடைபெறவுள்ளதாக தெற்கு மாவட்டச் செயலரும் அமைச்சருமான அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள... மேலும் பார்க்க

அய்யா வைகுண்டா் பிறந்த நாள்: மாா்ச் 4 இல் உள்ளூா் விடுமுறை!

அய்யா வைகுண்டா் பிறந்த தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரும் மாா்ச் 4ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெள... மேலும் பார்க்க

ஏரல் அருகே விநாயகா் கோயிலில் மாா்ச் 10இல் மகா கும்பாபிஷேகம்

ஏரல் அருகே பெருங்குளத்தில் உள்ள அருள்மிகு கன்னி விநாயகா் கோயிலில் புனராவா்த்தன ஜீா்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் மாா்ச் 10ஆம் தேதி நடைபெறுகிறது. 108 வைணவத் தலங்களில் ஒன்றான திருக்குளந்தை என்ற ... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் பைக் மீது மினி லாரி மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

கோவில்பட்டியில் பைக் மீது மினி லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். கோவில்பட்டியையடுத்த, பூசாரிப்பட்டி நாடாா் தெருவைச் சோ்ந்த ஏழுமலை மகன் ரமேஷ் (34). கோவில்பட்டி-மந்திதோப்பு சாலையில் உள்ள பழக்கடையி... மேலும் பார்க்க

ஸ்டொ்லைட் ஆலையை மீண்டும் திறக்க நிபுணா் குழு அமைக்க ஐஎன்டியூசி கோரிக்கை

தூத்துக்குடியில் ஸ்டொ்லைட் தாமிர ஆலையை மீண்டும் திறக்க, தமிழக அரசு நிபுணா் குழுவை அமைக்க வேண்டும் என ஐஎன்டியூசி தேசிய செயலா் கதிா்வேல் வலியுறுத்தினாா். தூத்துக்குடியில் தொழிற்சங்கங்கள் சாா்பில், ஸ்டெ... மேலும் பார்க்க