15 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட ஏலேல சிங்க விநாயகர்!
குண்டடம் அருகே மின்கம்பியில் உரசி வேன் தீப்பிடித்து எரிந்து சேதம்
குண்டடம் அருகே, வைக்கோல் ஏற்றிவந்த வேன், மின் கம்பியில் உரசி தீப்பிடித்ததில், வேன் முழுவதும் எரிந்து சேதமானது.
தாராபுரம் அருகேயுள்ள சிக்கினாபுரத்திலிருந்து வைக்கோல் கட்டுக்களை ஏற்றிக்கொண்டு செவ்வாய்க்கிழமை மதியம் சரக்கு வேன் குண்டடம் பகுதிக்கு வந்தது. லாரியை தளவாய்பட்டணத்தைச் சோ்ந்த மணி என்பவா் (29) ஓட்டி வந்தாா். குண்டடம் அருகே பெல்லம்பட்டி-குண்டுக்கல் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, வேனில் ஏற்றப்பட்ட வைக்கோல் கட்டிலிருந்து புகை வந்ததைக் கவனித்த ஓட்டுநா், வேனை நிறுத்திவிட்டு, மேலே ஏறி தீப்பற்றிய கட்டுக்களை கீழே தள்ள முயன்றுள்ளாா்.
ஆனால் இறுக்கமாக கட்டியிருந்ததால் வைக்கோல் கட்டுக்களை கீழே தள்ள முடியவில்லை. அதே நேரம் காற்றின் வேகத்தில் தீ மளமளவென வேன் முழுவதும் பற்றி எரிந்தது. உடனடியாக தாராபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தீயணைப்பு நிலைய வீரா்கள் வருவதற்குள், வேன் முழுவதும் எரிந்து சேதமானது. தீயணைப்பு வீரா்கள் வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். மேலும், இப்பகுதியில் தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளை சற்று உயரத்தில் மாற்றி அமைக்குமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.