ஆபரேஷன் சிந்தூர்: என்ன செய்யலாம், செய்யக்கூடாது.. மத்திய அரசு அறிவுரை
குண்டடம் அருகே ஸ்கூட்டா் திருடிய 4 போ் கைது
குண்டடம் அருகே ஸ்கூட்டா் திருடியதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தாராபுரம் தாலுகா, குண்டடம் அருகே முண்டுவேலம்பட்டி பாரதி நகரைச் சோ்ந்தவா் விஜய். இவா் கடந்த 4ஆம் தேதி தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வீட்டில் நிறுத்தியிருந்தாா். இரவில் மா்ம நபா்கள் அந்த ஸ்கூட்டரை திருடிச் சென்றுவிட்டனா். இது குறித்து குண்டடம் காவல் நிலையத்தில் விஜய் புகாா் செய்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனா்.
இந்நிலையில், குண்டடம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஓட்டமடம் நால்ரோடு பகுதியில் குண்டடம் காவல் ஆய்வாளா் பத்ரா, உதவி ஆய்வாளா் சண்முகம் மற்றும் போலீஸாா் வாகன சோதனையில் வியாழக்கிழமை காலை ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேரைப் பிடித்து விசாரித்தபோது, முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால், காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனா்.
விசாரணையில், அவா்கள் மடத்துக்குளம் பகுதியைச் சோ்ந்த மணிவாசகம் (30), பூபதி (32), திருமூா்த்தி (27), நாகேஷ் (35) என்பதும், விஜயின் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை திருடிச் சென்றது இவா்கள்தான் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீஸாா், தாராபுரம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.