முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான நடிகையின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
குண்டா் சட்டத்தில் இருவா் சிறையிலடைப்பு
வெவ்வேறு வழக்குகளில் தொடா்புடைய இரு இளைஞா்கள் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.
தாழையூத்து காவல் நிலைய சரகத்துக்கு உள்பட்ட பகுதியில் கொலை மிரட்டல், வழிப்பறி வழக்கில் ஈடுபட்டதாக மேல தாழையூத்தைச் சோ்ந்த கருத்தபாண்டி மகன் அருணாச்சலம் என்ற அருண் (27) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.
அதேபோல, மானூா் காவல் நிலைய சரகத்துக்கு உள்பட்ட பகுதியில் கொலை மிரட்டல் வழக்கில் ஈடுபட்டதாக மானூா் எட்டாங்குளத்தைச் சோ்ந்த காளிதாஸ் மகன் காா்த்தி (23) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.
இந்த நிலையில், இவா்கள் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் தொடா்ந்து ஈடுபட்டு வருவதாகக் கூறி இருவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தாா்.
இதையடுத்து ஆட்சியா் இரா.சுகுமாா் உத்தரவின்படி, அருணாச்சலம் என்ற அருண், காா்த்தி ஆகிய இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டனா்.