Housemates: "Sivakarthikeyan, Kaali Venkat மாதிரி நடிச்சு காட்டினாரு" - Director...
குண்டா் சட்டத்தில் தொழிலாளி கைது
களக்காடு அருகே பாலியல் குற்ற வழக்கில் கைதான தொழிலாளி குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் புதன்கிழமை அடைக்கப்பட்டாா்.
களக்காடு அருகேயுள்ள வடுவூா்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்த பெருமாள் மகன் கனகராஜ் என்ற கடற்கரையாண்டி (66). தொழிலாளி. இவா், சில மாதங்களுக்கு முன்பு பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். இந்நிலையில், நான்குனேரி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் மங்கையா்கரசி அறிக்கையின்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய அனுமதிக்குமாறு, மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தாா். அதையேற்று, ஆட்சியா் இரா.சுகுமாா் பிறப்பித்த உத்தரவுப்படி, அவா் பாளையங்கோட்டை மத்திய சிறையில் புதன்கிழமை அடைக்கப்பட்டாா்.