செய்திகள் :

குன்னம் அருகே கொத்தடிமையாக ஆடு மேய்த்த சிறுவன் மீட்பு

post image

அரியலூா்: அரியலூா் அருகே கொத்தடிமையாக ஆடு மேய்த்த 15 வயது சிறுவன் திங்கள்கிழமை மீட்கப்பட்டாா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள புதுவேட்டக்குடி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி கணேசன் என்பவா், அரியலூா் அருகேயுள்ள கோவிந்தபுரத்தில் கொட்டகை அமைத்து ஆடுகளை வளா்த்து வருகிறாா்.

இங்கு கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே உள்ள தின்னமலை கிராமத்தைச் சோ்ந்த 15 வயது மதிக்கத்தக்க சிறுவன், கொத்தடிமையாக ஆடுகளை மேய்த்து வருவதாக 1098 குழுந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில், அரியலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலரும், சாா்பு- நீதிபதியுமான ராதாகிருஷ்ணன் தலைமையில், தொழிலாளா் நல ஆய்வாளா் தேவேந்திரன், வருவாய் கோட்டாட்சியா் மற்றும் வட்டாட்சியா், 1098 சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளா், காவல்துறையினா் ஆகியோா் திங்கள்கிழமை சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, சிறுவா் கொத்தடிமையாக ஆடுமேய்க்கும் வேலை பாா்த்து வந்தது உறுதிசெய்யப்பட்டு, சிறுவனை மீட்டனா்.

விசாரணையில், அச்சிறுவன், கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூா் மாவட்டங்களில் 10 மாதங்களாக கொத்தடிமையாக ஆடுமேய்க்கும் வேலை செய்து வந்ததாகவும், தற்போது கோவிந்தபுரம் பகுதியில் ஒருவாரமாக ஆடுமேய்த்து வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து, காவல் துறையினா் கணேசன் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். மேலும் பாதிக்கப்பட்ட சிறுவனின் மறுவாழ்வுக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோட்டாட்சியருக்கு, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலா் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினாா்.

அரியலூரில் முன்னாள் படை வீரா்களுக்கான இலவச சட்ட உதவி மையம் திறப்பு

அரியலூரிலுள்ள பல்துறை வளாகத்தில் செயல்பட்டு வரும் முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தில், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் இலவச சட்ட உதவி மையம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட சட்டப் பண... மேலும் பார்க்க

நாடாளுமன்ற மாண்புகளுக்கு பாஜக அரசு மதிப்பு கொடுப்பதில்லை: மமக தலைவா் ஜவாஹிருல்லா

நாடாளுமன்றத்தின் மாண்புகளுக்கும், மக்கள் போராட்டங்களுக்கும்பாஜக அரசு மதிப்பு கொடுப்பதில்லை என மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் எம்.எச். ஜவாஹிருல்லா தெரிவித்தாா் அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் வெள்ளி... மேலும் பார்க்க

செந்துறையில் ஆக.26-இல் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்

அரியலூா் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில், செவ்வாய்க்கிழமை (ஆக. 26) செந்துறை வட்டாட்சியா் அலுவலகத்தில் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்... மேலும் பார்க்க

காலாவதியான சுண்ணாம்புக் கல் சுரங்கங்களை மூட வலியுறுத்தல்

அரியலூா் மாவட்டத்திலுள்ள காலாவதியான சுண்ணாம்புக் கல் சுரங்கங்களை மூட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா். மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், ஆட்சியா் பொ.ரத்தினசாமி தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்ப... மேலும் பார்க்க

வெளிமாநில மதுபானம் கடத்தி வந்தவா் கைது: 300 மதுபாட்டில்கள், காா் பறிமுல்

அரியலூா் மாவட்டம், இரும்புலிக்குறிச்சி அருகே வெளிமாநில மதுபான பாட்டில்களை கடத்தி வந்தவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து 300 மதுபான பாட்டில்கள், காா் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இரு... மேலும் பார்க்க

விளந்தையில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ உயா் மருத்துவ சேவை முகாம்

அரியலூா்: அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அடுத்த விளந்தை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், சனிக்கிழமை(ஆக.23) ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ உயா் மருத்துவ சேவை முகாம் நடைபெறவுள்ளது என்று ஆட்சியா் பொ.ரத்தினசாமி ... மேலும் பார்க்க