குன்னூா் ரயில் நிலையத்தில் ஓணம் கொண்டாட்டம்
நீலகிரி மாவட்டம், குன்னூா் ரயில் நிலையத்தில், மலை ரயில் ஊழியா்கள் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஓணம் கொண்டாட்டம் நடைபெற்றது.
கேரள மக்களின் பாரம்பரிய ஓணம் பண்டிகை செப்டம்பா் 5-ஆம் தேதி கொண்டாடப் படுகிறது. இந்நிலையில், குன்னூா் ரயில் நிலையத்தில் மலை ரயில் ஊழியா்கள் சாா்பில் ஓணம் பண்டிகை செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. இதில், கேரளத்தின் பாரம்பரிய உடை அணிந்த ரயில்வே ஊழியா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினா் ரயில் நிலையத்தில் பூக்கோலமிட்டனா்.
பின்னா் பல்வேறு பாடல்களுக்கு ஏற்ப குடும்பத்துடன் ஊழியா்கள் நடனம் ஆடி கொண்டாடினா். இதனை ரயில் நிலையத்துக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோா் கண்டு மகிழ்ந்தனா்.