செய்திகள் :

குபேரா தணிக்கைச் சான்றிதழ், ரன்னிங் டைம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

post image

தனுஷின் குபேரா திரைப்படத்திற்குத் தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

நடிகர் தனுஷின் 51-வது படத்தை சேகர் கமூலா இயக்கியுள்ளார். இதில் நாகார்ஜுனா பிரதான பாத்திரத்திலும் ரஷ்மிகா மந்தனா நாயகியாகவும் நடித்துள்ளனர்.

குபேரா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் பான் இந்தியப் படமாக உருவாகியுள்ளது. ஜூன் 20 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.

ட்ரான்ஸ் ஆஃப் குபேரா (trance of kubera) எனப் பெயரிடப்பட்ட டீசர் விடியோ ரசிகர்களிடையே கவனம் பெற்றது.

தற்போது, படத்தின் போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்துள்ளன.

இந்நிலையில், படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. அத்துடன் ரன்னிங் டைம் 181 நிமிஷம் (3 மணி நேரம் 1 நிமிஷம்) எனவும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக 3.15 மணிநேரம் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது 3 மணி நேரம் 1 நிமிஷம் என அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் குபேரா டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

காயல் படத்தின் டிரைலர்!

நடிகை காயத்ரி நடிப்பில் உருவாகியுள்ள காயல் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழில் '18 வயசு’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை காயத்ரி ஷங்கர். அதன்பின், நடுவுலகொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி உள்பட பல ... மேலும் பார்க்க

ஆஸ்கர் விருது பெறும் டாம் க்ரூஸ்!

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ், திரைத்துறைக்கு ஆற்றிய பங்கிற்காக அவருக்கு கௌரவ ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் தனது ஆக்‌ஷன் படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகர் டாம் க்ரூஸ். மிஷன்: இம்பா... மேலும் பார்க்க

விமான நிலையத்திலிருந்து ஒன்றாகச் சென்ற ரஷ்மிகா - விஜய் தேவரகொண்டா!

நடிகை ரஷ்மிகாவும் விஜய் தேவரகொண்டாவும் ஒன்றாக காரில் பயணித்த புகைப்படங்கள், விடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன. கீதா கோவிந்தம் படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்த ரஷ்மிகா மந்தனா... மேலும் பார்க்க

39 வயதானாலும் சிங்கம்தான்..! ஆட்ட நாயகன் விருது வென்ற ராமோஸ்!

ஃபிஃபா நடத்தும் கிளப் உலகக் கோப்பை போட்டியில் செர்ஜியோ ராமோஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். கிளப் உலகக் கோப்பையின் குரூப் இ பிரிவில் மான்டேரி ரயாடோஸ் அணியும் இன்டர் மிலன் அணியும் இந்திய நேரப்படி இன்று ... மேலும் பார்க்க

ரூ.50 கோடியில் காசி நகரத்தை உருவாக்கும் ராஜமௌலி!

இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கும் புதிய படத்திற்காக ரூ.50 கோடியில் செட் அமைத்து வருவதாகக் கூறப்படுகிறது. தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுடன் இணைந்து ராஜமௌலி புதிய படத்தை இயக்கிவிருக்கிறார். இந்தப் படத்தி... மேலும் பார்க்க

விஜய் சேதுபதி நடித்த சீரியலின் பெயர் தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஜய் சேதுபதி, சின்ன திரை தொடர்கள், குறும்படங்கள் என படிப்படியாக நடித்து தேசிய விருது வென்ற நடிகராக உயர்ந்துள்ளார். தமிழ் மட்டுமின்றி பாலிவுட்டில... மேலும் பார்க்க