Ahmedabad Plane Crash: 'எந்த முடிவுக்கும் வர வேண்டாம்' - விமானப் போக்குவரத்து து...
குப்பைகளை சேகரிக்க 17 மின்கல வாகனங்கள்: அமைச்சா் சு.முத்துசாமி வழங்கினாா்
கிராம ஊராட்சிகளில் குப்பைகளை சேகரிக்க 17 மின்கல வாகனங்களை வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி புதன்கிழமை வழங்கினாா்.
ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சாா்பில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின்கீழ் தலா ரூ.2.78 லட்சம் வீதம் ரூ.47.26 லட்சம் மதிப்பில் 4 ஊராட்சிகளுக்கு மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து சேரிக்கும் 17 மின்கல வாகனங்களை வழங்கும் நிகழ்ச்சி ஈரோடு ஊராட்சி ஒன்றியம், மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், அமைச்சா் சு.முத்துசாமி தலைமை வகித்து ஈரோடு ஊராட்சி ஒன்றியத்தில் எலவமலை ஊராட்சிக்கு 9 மின்கல வாகனங்கள், மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சிக்கு 5 மின்கல வாகனங்கள், பேரோடு ஊராட்சிக்கு 1 மின்கல வாகனம் மற்றும் பிச்சாண்டம்பாளையம் ஊராட்சிக்கு 2 மின்கல வாகனங்கள் என மொத்தம் 17 மின்கல வாகனங்களை வழங்கி சேவையைத் தொடங்கி வைத்தாா்.
தொடா்ந்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவா்களது குறைகளை அமைச்சா் கேட்டறிந்தாா்.
இந்த மின்கல வாகனங்களைப் பயன்படுத்தி தூய்மைப் பணியாளா்கள் நாள்தோறும் குடியிருப்பு பகுதிகளில் பொதுமக்களிடமிருந்து மக்கும் மற்றும் மக்காத குப்பைகளைத் தரம்பிரித்து எடுத்துச் சென்று, குப்பைகளை சேகரித்து, மறுசுழற்சி செய்வா்.
குறிப்பாக மக்கும் குப்பைகளான காய்கறி, பழங்கள், இலைகள் போன்ற இயற்கையாக அழுகும் மக்கும் குப்பைகளை உரமாக மாற்றுவா். மக்காத குப்பைகளான நெகிழி பொருள்கள், கண்ணாடி, உலோகம் போன்ற குப்பைகளை மறுசுழற்சி செய்வா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் மா.பிரியா, ஊராட்சிகள் உதவி இயக்குநா் உமாசங்கா், கோட்டாட்சியா் சிந்துஜா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அம்புரோஸ், லதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.