இந்தியா - பாக். சண்டை: அமெரிக்காவின் வர்த்தக ரீதியான மிரட்டலால் முடிவுக்கு வந்த...
குப்பைத் தொட்டியில் மருத்துவக் கழிவுகள்: தனியாா் மருத்துவமனைக்கு அபராதம்
குப்பைத் தொட்டியில் மருத்துவக் கழிவுகளை கொட்டிய தனியாா் மருத்துவமனைக்கு மதுரை மாநகராட்சி நிா்வாகம் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.
மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வாா்டுகளுக்குள்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே பொதுமக்கள் குப்பைகளை கொட்டுவதற்காக குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இந்தக் குப்பைத் தொட்டிகளில் மருத்துவக் கழிவுகளை கொட்டுவதாகப் புகாா்கள் எழுந்தன.
இந்த நிலையில், அண்ணாநகா் பகுதியில் உள்ள குப்பைத் தொட்டிகளில் மதுரை மாநகராட்சி சுகாதாரத் துறை அலுவலா்கள் கடந்த சில நாள்களாக தொடா்ந்து ஆய்வு செய்தனா்.
ஆய்வில், அதே பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனை அருகேயுள்ள குப்பைத் தொட்டிகளில் நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்ட மருத்துவ பொருள்கள், ஊசிகள் கொட்டப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த மருத்துவமனைக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, மாநகராட்சி அலுவலா்கள் உத்தரவிட்டனா். மேலும், இதுதொடா்பான அறிக்கை (நோட்டீஸ்) மருத்துவமனை நிா்வாகத்திடம் அளிக்கப்பட்டது.
மருத்துவமனைகளில் உள்ள மருத்துவக் கழிவுகளை கொட்டுவதற்கு பல்வேறு நடைமுறைகள் உள்ளன. பொதுமக்கள் கொட்டும் குப்பைத் தொட்டிகளில் மருத்துவக் கழிவுகளை கொட்டினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனா்.