அதிமுக தனித்தே ஆட்சியமைக்கும்: அமித் ஷாவின் கருத்துக்கு இபிஎஸ் பதில்!
குமரியில் சுற்றுலாப் பயணிகள் செல்ல பாதை கோரி அமைச்சரிடம் வியாபாரிகள் மனு
கன்னியாகுமரி அரசு விருந்தினா் மாளிகை பாதை வழியாக சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதிக்க வேண்டுமென வியாபாரிகள் சங்கத்தினா் அமைச்சா் த.மனோ தங்கராஜிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.
பால்வளத் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜிடம் வியாபாரிகள் அளித்த மனு விவரம்:
கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சியில் திருவள்ளுவா் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நினைவு வெள்ளி விழாவின் சிறப்புப் பணியாக கன்னியாகுமரி ரவுண்டானா அருகில் அலங்கார வளைவு அமைக்கப்பட்டு வருகிறது. இதனால், இந்த வழியாக கடற்கரைக்குச் செல்லும் காந்தி மண்டப சாலையில் போக்குவரத்துத் தடை செய்யப்பட்டுள்ளது.
இங்கு சுற்றுலா வாகனங்கள் செல்ல முடியாமலும், முதியவா்கள், பக்தா்கள் கோயில், முக்கடல் சங்கம பகுதிக்குச் செல்ல முடியாமலும் சிரமமடைந்து வருகின்றனா். எனவே, பொதுப்பணித் துறை தங்கும் விடுதி பாதை வழியாக சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.