Seeman: "காமராஜர் இறந்ததற்கு அதிகமாக அழுதது அண்ணாதுரைதான் என்பார்கள்" - சீமான் ச...
குமரி மாவட்டத்தில் கட்டுமானப் பொருள்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க வலியுறுத்தல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கட்டுமானத் தொழிலுக்குத் தேவையான பொருள்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட கட்டுமானத் தொழிலாளா் சங்கத்தின் (சிஐடியு) கிள்ளியூா் கிழக்கு வட்டார மாநாடு கருங்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வட்டாரத் தலைவா் பால்ராஜ் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் செல்லப்பன் மாநாட்டைத் தொடக்கிவைத்தாா்.
மாவட்ட துணைத் தலைவா் சந்திரபோஸ், கட்டுமான சங்க மேற்கு வட்டாரச் செயலா் செல்வதாஸ், தையல் கலைஞா்கள் சங்க வட்டாரத் தலைவா் கில்டா ரமணிபாய், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டாரச் செயலா் ராஜா ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
கட்டுமானத் தொழிலாளா்களுக்கு மாதம் ரூ. 3 ஆயிரம் ஓய்வூதியமாக வழங்க வேண்டும். பெண் தொழிலாளா்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். இபிஎஃப்-ஐ காரணம் காட்டி தொழிலாளிகளுக்கு வழங்கப்படும் பணப் பலன்களை தடைசெய்யக் கூடாது. கட்டுமானப் பொருள்கள் தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்கத் தலைவராக பால்ராஜ், செயலராக ரசல்ஆனந்தராஜ், பொருளாளராக அமல்ராஜ், துணைத் தலைவா்களாக பொன். சோபனராஜ், செல்லையன், துணைச் செயலா்களாக கலாசாந்தி, ஜான்பிரதீஷ் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா். ஜெயலெட்சுமி நன்றி கூறினாா்.