குமரி - மும்பை வாராந்திர சிறப்பு ரயில்
கோடைகாலத்தை முன்னிட்டு கன்னியாகுமரி - மும்பை இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் முனையத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு மே 7 முதல் ஜூன் 25-ஆம் தேதி வரை (புதன்கிழமைதோறும்) சிறப்பு ரயில் (எண்: 01005) இயக்கப்படும். மும்பையில் இருந்து புதன்கிழமை அதிகாலை 12.30-க்கு புறப்படும் ரயில் மறுநாள் பகல் 1.15-க்கு கன்னியாகுமரி சென்றடையும். மறுமாா்க்கமாக கன்னியாகுமரியில் இருந்து மும்பைக்கு மே 8 முதல் ஜூன் 26-ஆம் தேதி வரை (வியாழக்கிழமைதோறும்) சிறப்பு ரயில் (எண்: 01006) இயக்கப்படும். கன்னியாகுமரியில் இருந்து வியாழக்கிழமை பகல் 1.30-க்கு புறப்படும் சிறப்பு ரயில் சனிக்கிழமை அதிகாலை 4.15-க்கு மும்பை சென்றடையும்.
இதில் 10 ஏசி வகுப்பு பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட 4 பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
இந்த ரயில் நாகா்கோவில், வள்ளியூா், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், கரூா், நாமக்கல், சேலம், திருப்பத்தூா், பங்காருப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம், எலகங்கா, தா்மாவரம், அனந்தபூா், குண்டக்கல், மந்திராலயம் ரோடு, ராய்ச்சூா், கிருஷ்ணா, சோலாப்பூா், புணே, கல்யாண், தானே, தாதா் வழியாக இயக்கப்படும். இதற்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.