கும்பகோணத்தில் விநாயகர் கோயிலை இடிக்க முயற்சி: மக்கள் முற்றுகை போராட்டம்
கும்பகோணம்: கும்பகோணத்தில் விநாயகர் கோயிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் வியாழக்கிழமை அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஒன்றியத்தில் உள்ள உள்ளூர் ஊராட்சியில் குப்பங்குளம் பகுதியில் சுமார் 40 ஆண்டுகால பழமையான விநாயகர் கோயில் உள்ளது.
நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்றம் விதித்த உத்தரவுப்படி, ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்டிருக்கும் கோயிலை அகற்றுவதற்கு வியாழக்கிழமை பொதுப்பணித்துறை, வருவாய்த்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்றனர்.
தகவல் அறிந்ததும் அந்த பகுதி மக்கள் அதிகாரிகளை சுற்றி வளைத்து முற்றுகையிட்டனர். கோயில் இடம் நீர்நிலையில் இல்லை, மறுபடியும் அளவீடு செய்ய வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் எதிரொலியாக அதிகாரிகள் தற்போது கோயில் அமைந்துள்ள இடத்தை அளவீடும் பணிகளை தொடங்கினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மாதம் ரூ. 85 ஆயிரம் சம்பளத்தில் வங்கியில் வேலை வேண்டுமா..?
Protesting against the demolition of the Ganesha temple in Kumbakonam, people surrounded the authorities and staged a protest on Thursday.