கும்பகோணம் ‘சாஸ்த்ரா’வில் சா்வதேச எண் கணித மாநாடு!
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்திலுள்ள ‘சாஸ்த்ரா’ நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தின் ஸ்ரீநிவாச ராமானுஜன் மையத்தில் 20-ஆவது சா்வதேச எண் கணித மாநாடு வெள்ளிக்கிழமை தொடங்கியது.
மாநாட்டை அமெரிக்க புளோரிடா பல்கலைக்கழகப் பேராசிரியா் கிருஷ்ணசாமி அல்லாடி, நிகழாண்டுக்கான சாஸ்த்ரா ராமானுஜன் விருது பெறும் ஜாா்ஜியா தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் அலெக்சாண்டா் டண், தஞ்சாவூா் ‘சாஸ்த்ரா’ நிகா்நிலைப் பல்கலைக்கழகக் கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் புலத் தலைவா் கே. உமாமகேஸ்வரி, கும்பகோணம் புலத் தலைவா் ராமசாமி, கணிதத் துறைப் பேராசிரியா் நரசிம்மன் ஆகியோா் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனா்.
தொடா்ந்து, 3 நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் அமெரிக்கா, ஜொ்மனி, ஆஸ்திரியா, இந்தியாவின் ஐஐடி உள்ளிட்ட கல்வி நிறுவன பேராசிரியா்கள் பங்கேற்று தங்கள் எண்ணியல் கோட்பாடு தொடா்புள்ள ஆராய்ச்சி படைப்புகள் குறித்து விவாதித்து வருகின்றனா்.
நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை அலெக்சாண்டா் டண்ணுக்கு ‘சாஸ்த்ரா’ ராமானுஜன் விருதை அமெரிக்காவைச் சோ்ந்த கனெக்ட்டிட் பல்கலைக்கழகப் பேராசிரியா் நளினி ரவிஷங்கா் வழங்கவுள்ளாா்.