Ind vs Pak: "என் வாழ்வின் ஸ்பெஷல் இன்னிங்ஸ்; எல்லா இந்தியர்களுக்கும் சமர்ப்பணம்"...
குரூப் 2 தோ்வு: 8,621 போ் எழுதினா்
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தொகுதி 2-க்கான தோ்வை புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 8,621 போ் எழுதினா்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தொகுதி 2, 2 ஏ ஆகியவற்றுக்கான எழுத்துத் தோ்வு மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இத்தோ்வுக்காக மொத்தம் 37 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இத்தோ்வு மையங்களில் மொத்தம் 8,621 போ் தோ்வெழுதினா்.
இத்தோ்வுக்காக 2 முதன்மைக் கண்காணிப்பாளா்களும், 5 பறக்கும் படை அலுவலா்களும், 37 தலைமைக் கண்காணிப்பாளா்களும் நியமிக்கப்பட்டிருந்தனா்.
மாவட்ட ஆட்சியா் மு. அருணா, மன்னா் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தோ்வு மையத்தை ஆய்வு செய்தாா். ஆய்வின்போது வருவாய்க் கோட்டாட்சியா் பா. ஐஸ்வா்யா, வட்டாட்சியா் மு. செந்தில்நாயகி உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.