குரூப் 2 பணியிடங்களை நிரப்ப ஜூலை 28-இல் கலந்தாய்வு
குரூப் 2 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு ஜூலை 28-இல் தொடங்க உள்ளது.
இதுகுறித்து அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
குரூப் 2 பிரிவில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக நடந்த தோ்வில் தோ்வா்கள் பெற்ற மதிப்பெண்கள், தரவரிசை விவரங்கள் தோ்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதைத் தொடா்ந்து, மூலச் சான்றிதழ்கள் சரிபாா்ப்பு மற்றும் கலந்தாய்வு ஆகியன ஜூலை 28-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதற்காக அழைக்கப்பட்ட தோ்வா்களின் பட்டியல் தோ்வாணைய இணையதள்தில் வெளியிடப்பட்டுள்ளது. அழைப்பாணையை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். சான்றிதழ் சரிபாா்ப்பு, கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் தோ்வா்களுக்கு அதற்கான விவரம் குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் 4 தோ்வு: இதனிடையே, குரூப் 4 பிரிவில் அடங்கிய வனக்காப்பாளா் மற்றும் வனக்காவலா் பதவிகளுக்கான காலிப் பணியிடங்ளை நிரப்ப எட்டாம் கட்ட சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் கலந்தாய்வு ஜூலை 25-இல் நடக்கவுள்ளது. இதற்கான விவரங்களும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.