செய்திகள் :

குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை(மே 24) கடைசி நாள்!

post image

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நாளையுடன் (மே 24) முடிவடைகிறது.

தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக பல்வேறு பிரிவுகளில் போட்டித் தேர்வு நடத்தப்படுகிறது.

இதில் குறைந்தபட்ச கல்வித்தகுதியுடன் கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் 3,935 பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் 25 ஆம் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டது.

விருப்பமுள்ளவர்கள் www.tnpsc.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இணையத்தில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளை(மே 24) முடிவடைகிறது. கடைசி நேரத்தில் விண்ணப்பம் செய்யும்போது இணைய பிரச்னைகள் வர வாய்ப்புள்ளதால் விரைந்து விண்ணப்பிக்குமாறு ஏற்கெனவே டிஎன்பிஎஸ்சி கூறியுள்ளது.

எனினும் மே 24(சனிக்கிழமை) நள்ளிரவு 11.59 வரை டிஎன்பிஎஸ்சி இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம், விண்ணப்பத்தில் திருத்தங்களைச் செய்ய மே 29 முதல் 31 ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த குரூப் 4 தோ்வு ஜூலை 12-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறவுள்ளது.

இதையும் படிக்க | மா. சுப்பிரமணியனுக்கு எதிரான வழக்கு வேறு நீதிபதி அமர்வுக்கு மாற்றம்!

சோனியா, ராகுலுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!

தில்லி சென்றுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் சந்திப்பு மேற்கொண்டுள்ளார்.மத்திய அரசின் நிதி நிர்வாகம் தொடர்பான நீதி ஆயோக் கூட்டம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. நடப... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்திற்கு தென் மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்துக்கு நெல்லை, தென்காசி, குமரி உள்பட 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) அடுத்த 3 மணி நேரத்த... மேலும் பார்க்க

வேலூரில் பெண்ணை அடித்துக் கொன்று இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை!

வேலூர்: வேலூரில் பெண்ணை அடித்துக் கொலை செய்து விட்டு இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பாகாயம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.வேலூர் சின்னஅல்லா... மேலும் பார்க்க

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் வழியில் தமிழ்நாடு போராடும், வெல்லும்: அமைச்சர் அன்பில் மகேஷ்

திருச்சி: பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் வழியில் தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என முத்திரையர் சிலைக்கு மாலை அணிவித்த பின் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்டத்தை ஆட்சி ப... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக ரயில் பயணச் சீட்டுகள் விற்பனை செய்தவர் கைது: ஆா்பிஎஃப் அதிரடி

கோவை போத்தனூரில் சட்டவிரோதமாக ரயில் பயணச் சீட்டுகள் விற்பனை செய்த ஒருவரை ரயில்வே போலீசார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்த ரூ. 26,230 மதிப்புள்ள பயணச் சீட்டுகளை பறிமுதல் ச... மேலும் பார்க்க

கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி: டெண்டர் கோரியது அரசு!

கல்லூரி மாணவர்களுக்கு வழங்குவதற்கு 20 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்ய தமிழக அரசு டெண்டர் கோரியது. கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி அல்ல... மேலும் பார்க்க