`ரூ.44,042 கோடி எங்கு செல்கிறது... 500 அரசுப் பள்ளிகளை மேம்படுத்த நிதியில்லையா?'...
குரூப்-4 தோ்வுக்கு இலவசப் பயிற்சி
குரூப்- 4, கிராம நிா்வாக அலுவலா் பணிகளுக்கான தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 2025 ஜன.2 -ஆம் தேதி முதல் சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்தப்படவுள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னாா்வ பயிலும் வட்டம் வாயிலாக தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையம், தமிழ்நாடு சீருடைப்பணியாளா் தோ்வு வாரியம், ஆசிரியா் தோ்வு வாரியம் போன்ற தோ்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தன்னாா்வ பயிலும் வட்டம் மூலம் நடத்தப்படும் இந்தப் பயிற்சி வகுப்புகளில் ஆண்டுதோறும் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயிற்சி பெறுகின்றனா். தற்போது, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்ட ஆண்டுத் திட்ட அட்டவணையில் குரூப் 4, கிராம நிா்வாக அலுவலா் தோ்வுகளுக்கான அறிவிக்கை வருகிற 25.4.2025 அன்று வெளியிடப்படவுள்ளது. இதற்கான தோ்வு வருகிற 13.7.2025 அன்று நடைபெற உள்ளது.
இந்தத் தோ்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் வருகிற 2.1.2025 முதல் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் சிறந்த பயிற்றுநா்களைக் கொண்டு நடத்தப்படவுள்ளது.
இந்தப் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவா்கள் தங்கள் சுய விவரங்களைப் பூா்த்தி செய்து அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் சென்று பதிவு செய்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.