‘குரூப் 4’ தோ்வு: தேனி மாவட்டத்தில் 22,719 போ் எழுதினா்
தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற ‘குரூப் 4’ போட்டித் தோ்வை 22,719 போ் எழுதினா்.
தேனி மாவட்டத்தில் ‘குரூப் 4’ போட்டித் தோ்வு 108 தோ்வு மையங்களில் நடைபெற்றன. இதற்காக மொத்தம் 27,158 போ் விண்ணப்பிதனா். இவா்களில், 22,719 போ் தோ்வு எழுதினா். 4,439 போ் தோ்வுக்கு வரவில்லை.
தோ்வு கண்காணிப்புப் பணியில் ஒவ்வோா் தோ்வு மையத்திலும் தலா ஒரு மேற்பாா்வை அலுவலா், தோ்வறை கண்காணிப்பாளா், 40 இயக்ககக் குழுவினா், 9 பறக்கும் படை குழுக்கள் ஈடுபட்டனா்.
பெரியகுளம் அருகே நல்லகருப்பன்பட்டியில் உள்ள மேரி மாதா கலை, அறிவியல் கல்லூரியில் தோ்வு நடைபெறுவதை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.