செய்திகள் :

குறுகிய காலத்தில் நிறைவடைந்த புன்னகைப் பூவே தொடர்!

post image

புன்னகைப் பூவே தொடர் குறுகிய காலத்தில் நிறைவடைந்துள்ளது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த தொடர் புன்னகைப் பூவே. இத்தொடரில் பிரதான பாத்திரத்தில் ஹர்ஷ் நாக்பால், ஐஷ்வர்யா ஆகியோர் நடித்து வந்தனர்

புன்னகைப் பூவே தொடரின் டிஆர்பி புள்ளிகள் குறைந்து வருவதால், இத்தொடரை முடித்து புதிய தொடரை ஒளிபரப்ப முடிவெடுக்கப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதம் தொடக்கப்பட்ட புன்னகைப் பூவே தொடர் 9 மாதங்களே ஆன நிலையில் 319 எபிசோடுகளுடன் நிறைவடைந்துள்ளது.

தொடர்கள் ஆரம்பிக்கப்பட்ட சில மாதங்களிலே முடிக்கப்படுகிறது. டிஆர்பி மற்றும் தவிர்க்க முடியாத காரணங்களால் முடிக்கப்படுகிறது. தற்போதைய சூழலில் 500 நாள்களைக் கடந்து தொடர்ந்து தொடர்கள் ஒளிபரப்பாவது அரிதாகவுள்ளது.

குறுகிய காலத்தில் புன்னகைப் பூவே தொடர் நிறைவடைந்த நிலையில், இத்தொடர் ஒளிபரப்பு செய்யப்பட்ட நேரத்தில் கிருஷ்ணா - ஆர்த்திகாவு நடிக்கும் புதிய தொடரான வினோதினி தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.

இத்தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: கூட்டத்தை வழிநடத்தும் தலைவன் நீங்கள்... சிம்புவைப் பாராட்டிய கமல்!

பவன் கல்யாண் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் நடித்துள்ள ஓஜி (தே கால் ஹிம் ஓஜி) திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வராக கடந்த 2024-ம் ஆண்டு பதவியேற்றுக்கொண்ட நடிகர் பவ... மேலும் பார்க்க

சிவகார்த்திகேயன் செய்த செயல்... பைரி நாயகன் நெகிழ்ச்சி!

நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து பைரி படத்தின் நாயகன் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இயக்குநர் ஜான் கிளாடி இயக்கத்தில் நடிகர் சையத் மஜித் நடிப்பில் உருவான திரைப்படம் பைரி. கடந்தாண்டு திரையரங்குகளில் வ... மேலும் பார்க்க

குபேரா கதை முன்னோட்ட விடியோ!

குபேரா திரைப்படத்திற்கான முன்னோட்ட விடியோ ஒன்றை படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர். நடிகர் தனுஷின் 51-வது படத்தை சேகர் கமூலா இயக்கி வருகிறார். இதில் நாகர்ஜுனா பிரதான பாத்திரத்திலும் நாயகியாக ராஷ்மிகாவும் ந... மேலும் பார்க்க

அப்துல் கலாம் கதையைப் படமாக்குவது சவாலானது: ஓம் ராவத்

அப்துல் கலாமின் பயோபிக் குறித்து அப்படத்தின் இயக்குநர் கருத்து தெரிவித்துள்ளார். நடிகர் தனுஷ் இட்லி கடை, குபேரா ஆகிய படங்களில் நடிகர் தனுஷ் நடித்து முடித்துள்ளார். இந்த இரு படங்களும் அடுத்தடுத்து வெளி... மேலும் பார்க்க

விக்ராந்த் நடித்த வில் பட டீசர்!

நடிகர் விக்ராந்த் நடிப்பில் உருவான வில் படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. நடிகர் விக்ராந்த் 10 ஆண்டுகளுக்கு முன் முன்னணி நடிகராக வரும் அளவிற்குப் பெரிதாகப் பேசப்பட்டவர். நாயகனாக அவர் நடித்த படங்கள... மேலும் பார்க்க