நியூயார்க்கில் வலம் வந்த விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா - வைரல் வீடியோவின் ப...
குறைதீா் கூட்டத்தில் 326 மனுக்கள் அளிப்பு
சிவகங்கை: சிவகங்கையில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளுக்காக 326 போ் மனு அளித்தனா்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் எஸ். செல்வசுரபி தலைமையில் நடைபெற்றது. இதில் இலவச வீட்டுமனைப் பட்டா, சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊனமுற்றோா், மறுவாழ்வுத் துறை உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து 326 மனுக்கள் பெறப்பட்டன.
இந்த மனுக்களில் தகுதியுடைய மனுக்கள் மீது தனிக் கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலா்அறிவுறுத்தினாா்.
இதில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முத்துகழுவன் உள்பட பல்வேறு துறைகளைச் சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.