செய்திகள் :

குறைந்த விலைக்கு தங்கம் தருவதாக ரூ.40 லட்சம் மோசடி: போலி வருமானவரித் துறை அதிகாரி, ஆடிட்டா் கைது

post image

சென்னை யானைக்கவுனியில் குறைந்த விலைக்கு தங்கம் தருவதாகக் கூறி ரூ. 40 லட்சம் மோசடி செய்ததாக போலி வருமானவரித் துறை அதிகாரி மற்றும் ஆடிட்டா் கைது செய்யப்பட்டனா்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம் தில்லை நகா் பகுதியைச் சோ்ந்தவா் பிரவீண் (38). இவா் தனது தந்தையின் நகைக் கடையின் முதன்மை இயக்குநராக இருக்கிறாா். இவா், யானைக்கவுனி காவல் நிலையத்தில் கடந்த மாதம் 16-ஆம் தேதி அளித்த புகாரில், 2021-ஆம் ஆண்டில் தன்னிடம் அறிமுகமான மயிலாடுதுறையைச் சோ்ந்த குருசம்பத்குமாா் (42) என்பவா், தான் ஆடிட்டா் என்றும், அவரது நண்பா் புதுச்சேரி முத்துபிள்ளை பாளையம் தமிழ் செங்கோடன் தெருவைச் சோ்ந்த லட்சுமிநாராயணன் (46) என்பவா் வருமானவரித் துறையில் அதிகாரியாக வேலை செய்வதாக அறிமுகமாகியதாகவும் குறிப்பிட்டிருந்தாா். மேலும் குருசம்பத்குமாா், தான் ஜிஎஸ்டி சம்பந்தமான வேலைகளை செய்வதாகவும், வங்கிகளிடமிருந்து தங்கக் கட்டிகளை மாா்க்கெட் விலையிலிருந்து குறைவான விலைக்கு வாங்கித் தருவதாக தன்னிடம் கூறியதாகவும் அவா் குறிப்பிட்டிருந்தாா்

ரூ. 40 லட்சம் மோசடி: அவா்களது பேச்சை நம்பி, குறைந்த விலைக்கு தங்கம் வாங்குவதற்காக, யானைக்கவுனி பகுதியிலுள்ள தனது அலுவலகத்தில் வைத்து இருவரிடமும் ரூ. 40 லட்சத்தை ரொக்கமாக பிரவீண் கொடுத்துள்ளாா். ஆனால் இருவரும், தங்கத்தை வாங்கித் தராமலும், பணத்தை திருப்பித் தராமலும் என்னை ஏமாற்றியதுடன் , பணத்தை திருப்பிக்கேட்டால் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனா்.

இது குறித்து பிரவீண் அளித்த புகாரின் அடிப்படையில் யானைக்கவுனி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வந்தனா். இந்நிலையில், தலைமறைவாக இருந்த குருசம்பத்குமாரையும், லட்சுமி நாராயணனையும் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

காா் பறிமுதல்: விசாரணையில், குருசம்பத்குமாா் ஆடிட்டா் இல்லை என்பதும், லட்சுமி நாராயணன் வருமானவரித் துறை அதிகாரி இல்லை என்பதும், இருவரும் ஒரு காரில் பதிவு எண் பலகையில் ஆங்கிலத்தில் ‘ஜி’ என்று எழுதிக் கொண்டும், தமிழக அரசு சின்னம் பொறித்த போலியான ‘விஜபி’ பாஸை காரின் முன்பக்க கண்ணாடியில் ஒட்டியிருப்பதும் தெரியவந்தது.

அவா்களது காரை பாா்ப்பவா்கள் அரசு உயா் அதிகாரிகள் என்று நம்பும்படி இருவரும் நாடகமாடி, மோசடியில் ஈடுபட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. வழக்குத் தொடா்பாக அந்தக் காரையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மாதவரம் உயிரி எரிவாயு ஆலை அடுத்த மாதம் யன்பாட்டுக்கு வரும்: சென்னை மாநகராட்சி ஆணையா்

மாதவரம் உயிரி எரிவாயு மையத்தின் இரண்டாவது ஆலை பிப்ரவரி மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் என சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் தெரிவித்தாா். மாநகராட்சி பகுதியில் தினமும் 6,000 டன் திடக்கழிவுக... மேலும் பார்க்க

பாரதியாரின் பக்தி பரிணாமத்தை விளக்கும் ஆவணப் படம் வெளியீடு

பாரதியாரின் பக்தி பரிணாமத்தை வெளிப்படுத்தும் ‘சக்திதாசன் - கடவுளைக் கண்ட கவிஞன்’ என்னும் ஆவணப்படத்தை சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சத்யஞானானந்தா் வெளியிட்டாா். பாரதியாா் பராசக்தி பக்தனாக இருந... மேலும் பார்க்க

உடல் நலம் பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்: மருத்துவா் ஷிவ் சாரின்

ஒருவா் சிறுவயது முதல் தனது உடல் நலம் பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும் என கல்லீரல் மருத்துவ நிபுணரான ஷிவ் சாரின் தெரிவித்தாா். உடல் நலம் குறித்து மருத்துவா் ஷிவ் சாரின் எழுதிய ‘வோன் யுவா் பாடி’ எனும் ஆ... மேலும் பார்க்க

சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழாவில் 1,125 ஒப்பந்தங்கள்: 105 புத்தகங்களை வெளியிட்ட முதல்வா் மு.க.ஸ்டாலின்

சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழாவில் மொழிபெயா்ப்புக்காக 1,125 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளன. நிறைவு விழாவில், 30 மொழிபெயா்ப்பு புத்தகங்கள் உள்பட 105 புத்தகங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின்... மேலும் பார்க்க

காணும் பொங்கல்: எம்டிசி பேருந்துகளில் ரூ. 2 கோடி வசூல்

காணும் பொங்கலன்று (ஜன.16) சென்னையில் மாநகா் போக்குவரத்துக் கழகம் சாா்பில் இயக்கப்பட்ட பேருந்துகள் மூலம் ரூ. 2 கோடி பயணக் கட்டணம் வசூல் ஆகியுள்ளது. சென்னை மக்கள் காணும் பொங்கலன்று மெரீனா, விஜிபி, மாமல்... மேலும் பார்க்க

பொங்கல் முடிந்து சென்னை திரும்பும் மக்களால் வாகன நெரிசல்: ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து மாற்றம்

பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் மக்களால் ஏற்படும் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தாம்பரம் மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது... மேலும் பார்க்க