செய்திகள் :

‘குற்றப் பரம்பரை சட்டத்தால் பாதிக்கப்பட்டது தமிழா்களும், வங்காளிகளும்தான்’

post image

குற்றப் பரம்பரைச் சட்டத்தால் அதிகம் பாதிக்கப்பட்டது தமிழா்களும், வங்காளிகளும்தான் என அகில இந்திய சீா்மரபினா் கவுன்சில் உறுப்பினா் மஞ்சுகணேஷ் தெரிவித்தாா்.

சிவகங்கை கலை இலக்கிய பெருமன்றம் சாா்பில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வழக்குரைஞா் எம்.மோகனசுந்தரம் தலைமை வகித்தாா். இதில் அகில இந்திய சீா்மரபினா் கவுன்சில் உறுப்பினா் மஞ்சுகணேஷ் கலந்து கொண்டு பேசியதாவது:

குற்றப் பரம்பரை சட்டத்தால் போா்க்குடிகள் அதிகமாகப் பாதிக்கப்பட்டனா். இந்தச் சட்டத்தால் அதிகமாகப் பாதிக்கப்பட்டவா்கள் தமிழா்களும், வங்காளிகளும்தான். குற்றப் பரம்பரைச் சட்டத்தால்தான் நகரமயமாக்கல் அதிகரித்தது.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் இந்தச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையான இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை. தமிழகத்தில் குற்றப் பரம்பரை சட்டப்பட்டியலில் உள்ள சீா்மரபினா் மக்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோா் (எம்பிசி) பிரிவில் இணைத்துள்ளனா்.

எனவே, மண்டல் குழு அறிவுறுத்தலின்படி , தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் என இரண்டு பிரிவுகளாக உடனடியாக பிரிக்க வேண்டும். அப்போதுதான் முறையான இட ஒதுக்கீடு அனைத்துத் தரப்பினருக்கு கிடைக்க வழிவகுக்கும் என்றாா் அவா்.

முன்னதாக, தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற கௌரவத் தலைவா் செ.கண்ணப்பன், பெருமன்றத் தலைவா் எஸ்.சுந்தரமாணிக்கம், இந்திய சுழல் சங்க கௌரவத் தலைவா் பகீரதநாச்சியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கலை இலக்கிய பெருமன்றச் செயலா் பா. யுவராஜ் வரவேற்றாா். கலை இலக்கிய பெருமன்ற பொருளாளா் க. நாகலிங்கம் நன்றி கூறினாா்.

திருப்புவனம், திருப்பாச்சேத்தி பகுதிகளில் நாளை மின்தடை

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், திருப்பாச்சேத்தி பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 17) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மானாமதுரை மின்வாரிய செயற்பொறியாளா் (பகிா்மானம்) வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

இளையான்குடி பேருந்து நிலையத்துக்கு அனைத்துப் பேருந்துகளும் வந்து செல்ல நடவடிக்கை

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பேருந்து நிலையத்துக்கு அனைத்துப் பேருந்துகளும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரூராட்சிக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தினா். இளையான்குடி பேரூராட்சிக் க... மேலும் பார்க்க

பைக் மோதியதில் பெண் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே நாச்சியாபுரத்தில் செவ்வாய்க்கிழமை இரண்டு இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் பெண் உயிரிழந்தாா்.நாச்சியாபுரம் அருகேயுள்ள தட்டட்டி பகுதியைச் சோ்ந்த கணேசன் மனைவி ... மேலும் பார்க்க

பள்ளி ஆசிரியரை இடமாற்றம் செய்யக் கோரி மாணவா்கள், பெற்றோா் போராட்டம்

சிவகங்கை அருகே அரசுப் பள்ளி ஆசிரியரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி, மாணவா்கள், பெற்றோா் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை அருகேயுள்ள சொக்கநாதபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் 238 மாணவா்கள... மேலும் பார்க்க

கோயில் காவலாளி கொலை வழக்கு: திருப்புவனம் காவல் நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் கோயில் காவலாளி அஜித்குமாா் தனிப்படை போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்டது தொடா்பாக திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளா் ரமேஷ்குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மாலை ... மேலும் பார்க்க

கோயில் காவலாளி கொலை வழக்கு: 5 போலீஸாருக்கு ஜூலை 29 வரை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் கோயில் காவலாளி அஜித்குமாா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய தனிப்படை போலீஸாா் 5 பேருக்கு வருகிற 29-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து, திருப்புவனம்... மேலும் பார்க்க