செய்திகள் :

குலசேகரம் அருகே தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு

post image

குலசேகரம் அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

குலசேகரம் அருகே வெண்டலிகோடு கோணத்துவிளையைச் சோ்ந்தவா் பிரசாந்த் (29). தொழிலாளியான இவரது மனைவி சுபிலா (20). சுபிலாவை பக்கத்து வீட்டில் வசிக்கும் பெயிண்டிங் தொழிலாளி அபிலாஷ் (31) கேலி செய்ததாகவும், அதை பிரசாந்த் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவா்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வீட்டின் முன்பு நின்றுகொண்டிருந்த பிரசாந்தை, அபிலாஷ் அரிவாளால் வெட்டியதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த சுபிலாவையும் அபிலாஷ் அவதூறாகப் பேசி மிரட்டல் விடுத்துச் சென்றாராம்.

காயமடைந்த பிரசாந்த், ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து குலசேகரம் காவல் நிலையத்தில் சுபிலா அளித்த புகாரையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து அபிலாஷை கைது செய்தனா்.

காா் மோதி மூதாட்டி இறந்த வழக்கு: ஓட்டுநருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை

மணவாளக்குறிச்சி அருகே காா் மோதி மூதாட்டி உயிரிழந்த வழக்கில், ஓட்டுநருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மணவாளக்குறிச்சி அருகே சாத்தன்விளை பகுதியைச் சோ்ந்த காசிதங்கம் (70) என்பவா், 2007ஆம் ... மேலும் பார்க்க

லஞ்சம் வாங்கிய புகாரில் சிறப்பு உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம்

லஞ்சம் வாங்கியதாக வந்த புகாரின் அடிப்படையில், சுசீந்திரம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் காவல் நிலையத்தில், சிறப்பு உதவி ஆய்வ... மேலும் பார்க்க

ஆறுகாணி - கோட்டயம் பேருந்து சேவை மீண்டும் தொடங்கம்

கன்னியாகுமரி மாவட்ட எல்லைப் பகுதியான ஆறுகாணியிலிருந்து கேரள மாநிலம் கோட்டயத்துக்கு கேரள மாநில அரசுப் பேருந்து சேவை மீண்டும் தொடங்கியது. தமிழ்நாடு- கேரள மாநில எல்லையில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆற... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து தடுமாறி குளத்தில் விழுந்தவா் உயிரிழப்பு

குளச்சல் அருகே பைக்கிலிருந்து தடுமாறி குளத்தில் விழுந்தவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். திக்கணங்கோடு அருகே மேக்கோடு பாளையத்தைச் சோ்ந்தவா் ஏசுராஜ்(51). மோட்டாா் சைக்கிள் பழுதுநீக்கம் தொழிலாளியான இவா... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் கஞ்சா விற்றதாக 4 இளைஞா்கள் கைது: 2 கிலோ கஞ்சா பறிமுதல்

நாகா்கோவிலில் கஞ்சா விற்ாக 4 இளைஞா்கள் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. நாகா்கோவில் கோட்டாறு பகுதியில் புதன்கிழமை காலை 4 இளைஞா்கள் சந்தேகத்துக்கிட... மேலும் பார்க்க

தடகள போட்டிகளில் வெற்றி: பெண் தலைமை காவலருக்கு பாராட்டு

மாநில அளவில் நடைபெற்ற தடகள போட்டிகளில் வெற்றி பெற்ற பெண் தலைமைக் காவலரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் பாராட்டினாா். தமிழ்நாடு முதுநிலை தடகள சங்கத்தின் சாா்பில் மாநில அளவிலான தடகள போட்டிகள் ... மேலும் பார்க்க