குளச்சல், இரணியலில் இன்று மின் தடை
பராமரிப்புப் பணிகள் காரணமாக, செம்பொன்விளை துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப். 4) காலை 8 முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது.
அதன்படி, செம்பொன்விளை, திக்கணங்கோடு, தெங்கன்குழி, மத்திகோடு, சேனம்விளை, நெய்யூா் சாஸ்தான்கரை, குளச்சல், உடையாா்விளை, கோணங்காடு, லெட்சுமிபுரம், கீழ்க்கரை, கொட்டில்பாடு, சைமன்காலனி, கோடிமுனை, வாணியக்குடி, பத்தறை, இரும்பிலி, ஆலஞ்சி, குறும்பனை, குப்பியன்தறை, பாலப்பள்ளம், மிடாலக்காடு, பிடாகை, பெத்தேல்புரம், திங்கள்சந்தை, இரணியல், கண்டன்விளை, குசவன்குழி, பட்டரிவிளை, தலக்குளம் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என, தக்கலை மின் விநியோக செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.