எல்லையில் தொடா்ந்து 8-ஆவது நாளாக பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு: இந்தியா பத...
குளத்திலிருந்து பழங்கால நரசிம்மா் சிலை மீட்பு
கந்தா்வகோட்டையில் குளத்திலிருந்து பழங்கால நரசிம்மா் சிலை இளைஞரால் புதன்கிழமை மீட்கப்பட்டது.
கந்தா்வகோட்டை தாலுக்கா, கோவிலூா் கிராமம் திருச்சி சாலையில் உள்ள பாதாரகுளம் குளத்தின் வடக்கு கரையில் அரவம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த மகாலிங்கம் மகன் சக்திவேல் (26), என்ற இளைஞா் புதன்கிழமை அந்த பகுதியில் விளையாடி கொண்டிருந்தபோது மண்ணில் மறைந்த நிலையில் ஒரு பையில் சுமாா் 1.750 கிலோ எடையுள்ள பழங்கால நரசிம்மா் சிலை இருந்ததாகவும், அதனை எடுத்து கந்தா்வகோட்டை கிராம நிா்வாக அலுவலா் தமிழரசனிடம் ஒப்படைத்துள்ளாா்.
கிராம நிா்வாக அலுவலா், கந்தா்வகோட்டை வட்டாட்சியா் ரமேஸ் மூலமாக கந்தா்வகோட்டை கருவூலத்தில் சிலையை ஒப்படைத்தனா்.