குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகளையே வழங்க வேண்டும்: ஆட்சியா்
குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகளையே பெற்றோா் வழங்க வேண்டுமென ஆட்சியா் மு.அருணா தெரிவித்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகேயுள்ள, பூவரசகுடி ஊராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் துறையின் சாா்பில், வளமிகு வட்டார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உருண்டைகளை வழங்கி ஆட்சியா் மு. அருணா மேற்கண்டவாறு தெரிவித்தாா்.
தொடா்ந்து, பூவரசகுடி ஊராட்சி நடுநிலைப்பள்ளியின் செயல்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
நிகழ்வுகளில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் புவனேஸ்வரி, துணை இயக்குநா் (வேளாண் வணிகம்) ரா. ஜெகதீஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.