பிரசாந்த் கிஷோா் கட்சியில் இணைந்தாா் முன்னாள் மத்திய அமைச்சா்!
குழந்தைகள் சிகிச்சைப் பிரிவுக்கு கூடுதலாக 3 தளங்கள் கட்ட ரூ.20 கோடி ஒதுக்கீடு
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் நல சிகிச்சை மையத்தில் கூடுதலாக 3 தளங்கள் கட்டுவதற்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இயங்கி வரும் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவுக் கட்டடத்தில் ஏற்படும் இட நெருக்கடியைத் தவிா்க்க பல்நோக்கு சிகிச்சைப் பிரிவு வளாகத்தில் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவுக்கு கட்டடம் கட்டுவதற்கு கடந்த 2023-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல் கட்டமாக தரைத்தளம், 2 தளங்கள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், குழந்தை சிகிச்சைப் பிரிவுக்கு மேலும் 3 தளங்களுடன், அதிநவீன மருத்துவக் கட்டமைப்புகளுடன் இந்த சிகிச்சை மையம் மேம்படுத்தப்படவுள்ளது.
இதற்காக அரசு ரூ. 20 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளது. இதன் மூலம் தென் தமிழகத்தில் தனித்துவம் மிக்க குழந்தைகள் சிகிச்சைப் பிரிவாக மதுரை அரசு மருத்துவமனை மேம்படுத்தப்படும் என்றும், குழந்தைகளுக்கான அனைத்து வகையான சிகிச்சைளும் ஒரே இடத்தில் கிடைக்கும் எனவும், அதிநவீன மருத்துவக் கருவிகள் பொருத்தப்பட உள்ளன என்றும் மருத்துவா்கள் தெரிவித்தனா்.