குழந்தைகள் முன்னேற்றக் கழகம் - பாடல் வெளியீடு!
நடிகர் யோகி பாபுவின் குழந்தைகள் முன்னேற்றக் கழகம் படத்தின் கும்பா கும்பா பாடல் இன்று வெளியானது. மானஸி பாடியுள்ள இந்தப் பாடலை, படத்தின் மறைந்த இயக்குநர் சங்கர் தயாளுவே எழுதியுள்ளார்.
சகுனி படத்தை இயக்கிய மறைந்த இயக்குநர் சங்கர் தயாளுவின் குழந்தை முன்னேற்றக் கழகம் படத்தில் குழந்தை நட்சத்திரங்களாக சங்கர் தயாளுவின் மகன் அத்வைத் உள்பட ஹரிகா படேடா, இமயவர்மன், மாஸ்டர் பவாஸ் நடித்துள்ளனர்.
யோகி பாபு, செந்தில் முக்கியக் கதாபாத்திரங்களாக நடித்துள்ள இந்தப் படத்தில் அகல்யா, லிஸி ஆண்டனி, சித்ரா லட்சுமணன், கோவிந்த மூர்த்தி, சரவணன், சுப்பு பஞ்சு நடித்துள்ளனர்.
மீனாட்சியம்மன் மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படம் வெள்ளிக்கிழமை (ஜன. 24) வெளியாகிறது.