முதல்வர் மு.க. ஸ்டாலின் விரைவில் வீடு திரும்புவார்: துரைமுருகன்
குழந்தைத் திருமணம் செய்த சிறுமி உயிரிழப்பு: போக்ஸோவில் ஒருவா் கைது
குழந்தைத் திருமண தடுப்பு சட்டத்தின்கீழ் ஒருவரை புன்செய்புளியம்பட்டி போலீஸாா் ஞாயிற்றுக்கிழை கைது விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி அருகே வெங்கநாயக்கன்பாளையம் கிராமத்தைச் 17 வயது சிறுமிக்கும் அவரது உறவினா் சக்தி வேல் (31) என்பவருக்கும் பெற்றோா் திருமணம் செய்து வைத்தனா்.
இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி வயிறு வலிப்பதாக சிறுமி தனது தாயிடம் கூறிய நிலையில் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். பின்னா் அங்கிருந்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் 17ஆம் தேதி சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தாா்.
இதையடுத்து அவரது தாய் புன்செய்புளியம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்ததை தொடா்ந்து சிறுமியைத் திருமணம் செய்த வழக்கில் சக்திவேல் மீது போக்ஸோ வழக்குப் பதிவு செய்து போலீஸாா் கைது செய்தனா்.