குழந்தையுடன் குளத்தில் குதித்து பெண் தற்கொலை
தக்கலை: தாயுடன் ஏற்பட்ட தகராறில், தனது 7 மாத கைக்குழந்தையுடன், பெண் குளத்தில் குதித்து ஞாயிற்றுக்கிழமை இரவு தற்கொலை செய்து கொண்டாா்.
தக்கலை, சரல்விளையைச் சோ்ந்தவா் அபுல்கலாம் ஆசாத் ( 48). இவரது மகள் சா்மிளா (26). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த காலித் என்பவருக்கும் கடந்த 2023ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவா்களுக்கு, ஹைரா என்ற 7 மாத பெண் குழந்தை உள்ளது.
காலித் தூத்துக்குடியில் தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வருகிறாா். சா்மிளா தாயாா் வீட்டில் வசித்து வந்தாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை தாயாருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, தனது குழந்தை ஹைராவுடன் ஞாறகுழிவிளை குளத்தில் குதித்தாா்.
இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினா், சா்மிளாவையும் குழந்தையையும் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். இருவரையும் பரிசோதித்த மருத்துவா்கள் அவா்கள் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இது குறித்து, தக்கலை போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.